Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரதமர் லீ உட்பட 40 உலகத் தலைவர்கள் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் உட்பட 40 உலகத் தலைவர்களைப் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் உட்பட 40 உலகத் தலைவர்களைப் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநாடு அடுத்த மாதம் 22, 23ஆம் தேதிகளில் இணையம்வழி நடைபெறும். பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசரம் குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய பொருளியல் பலன்களைப் பற்றியும் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு வரும் நவம்பர் மாதம் ஸ்காட்லந்தின் Glasgow நகரில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர், இடம்பெறவுள்ள இணைய மாநாடு முக்கிய மைல்கல் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

முதல்முறையாகத் திரு பைடனின் நிர்வாகத்தின்கீழ் பெரிய அளவில் பருவநிலை குறித்த மாநாடு நடைபெறவிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்களுக்கும் திரு. பைடன் அழைப்புவிடுத்துள்ளார்.
பருவநிலையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்த மாநாடு உதவும் என்று அமெரிக்கா நம்புகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்