Images
  • Climate Change
    (படம்:Reuters/Bret Hartman)

அனைத்துலகப் பாதுகாப்பு அக்கறைகள் குறித்த கருத்தாய்வில் பருவநிலை மாற்றம் குறித்து அதிக கவலை


அனைத்துலகப் பாதுகாப்பு அக்கறைகள் குறித்த கருத்தாய்வு ஒன்றில் பங்கேற்றவர்கள், பருவநிலை மாற்றத்தை முக்கிய அக்கறையாக வகைப்படுத்தியிருக்கின்றனர்.

அதற்கு அடுத்தடுத்த நிலைகளில், பயங்கரவாதமும், இணையத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

வடகொரியாவின் அணுசக்தித் திட்டம், உலகப் பொருளியல் ஆகியவையும் பாதுகாப்பு அக்கறைகளாகக் குறிப்பிடப்பட்டன.

வாஷிங்டனில் தளம் கொண்டுள்ள பியுவ் (Pew) ஆய்வு நிலையம் நடத்திய கருத்தாய்வில் கலந்துகொண்டவர்கள், பருவநிலை மாற்றத்தை முக்கிய அக்கறையாகக் கருதுவதாய்க் குறிப்பிட்டனர்.

சுமார் 27,600 பேர் கருத்தாய்வில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் செல்வாக்கு, ஆதிக்கம் குறித்தும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அக்கறை தெரிவித்தனர்.

ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா உட்பட, பத்து நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், அமெரிக்காவின் ஆதிக்கம் தங்கள் நாட்டுக்கு மிரட்டலாக விளங்குவதாய்க் குறிப்பிட்டனர்.

Top