Images
  • protest
    (படம்: Reuters)

BBC தலைமையகத்தில் பருவநிலை ஆர்ப்பாட்டக்காரர்கள்

பருவநிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டனில் உள்ள BBC ஊடக நிறுவனத்தின் தலைமையகத்தில் கூடி, நுழைவாயிலை மறித்துள்ளனர்.

Extinction Rebellion என்னும் பெயரில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

BBC நிறுவனம் அதன் செய்திகளில் பருவநிலை மாற்றத்தின் தொடர்பில் முழுமையான உண்மையைக் கூறவேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.

லண்டன் காவல்துறையினர் 1,000-க்கு மேலான நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலந்து ஆகிய நாடுகளில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


Top