Images
  • Cute Camels
    படம்: AFP/Karim Sahib

அழகான ஒட்டகங்களை அப்படியே மீண்டும் உருவாக்க முடியுமா?

அழகு நிறைந்த, அதிக பால் கொடுக்கும், ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒட்டகங்கள்....இவற்றைப் போன்று அச்சு அசலான ஒட்டகங்களை உருவாக்க முடியுமா?

முடியும் என்கிறது துபாயில் உள்ள இனப்பெருக்க உயிரியல் தொழில்நுட்ப நிலையம்.

நகலெடுப்பு (Cloning) முறையில், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 28 கர்ப்பங்களை உருவாக்கியுள்ளதாக அது கூறியது.

சென்ற ஆண்டு அதுபோல, 20 ஒட்டகங்கள் உருவாக்கப்பட்டன.

அவ்வாறு ஒட்டகங்களை உருவாக்க அதிகத் தேவை இருப்பதாகவும், தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அது சொன்னது.

அழகுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு அழகான ஒட்டகங்களை உருவாக்கவே அதிகமானோர் நிலையத்தை நாடுகின்றனர்.

அதற்காக சுமார் 54,000 டாலரிலிருந்து 109,000 டாலர் வரை செலவு செய்யச் செல்வந்தர்கள் தயார்.

ஒட்டகத்தின் அழகு, ஆரோக்கியம், வகை ஆகியவற்றைப் பொறுத்தே அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

எனினும், நகலெடுப்பு முறையினால் விலங்குகள் அதிக வேதனைக்கு ஆளாவதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

-AFP

Top