Images
  • insta
    (படம்: REUTERS)

Co-watching - நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த உதவும் Instagramஇன் புதிய அம்சம்

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசாங்கங்கள் அவற்றின் குடிமக்களை வீட்டிலேயே தங்கியிருக்க வலியுறுத்திவரும் வேளையில், பலரும் தனிமையை உணரக்கூடும்..

அவர்கள் தங்கள் கைத்தொலைபேசியை அதிகம் நாடுவார்கள்.

அத்தகைய சூழலில், நண்பர்களுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்?

Instagram அறிமுகம் செய்துள்ள 'Co-watching' அம்சம் அதனைச் சாத்தியமாக்குகிறது.

பயனீட்டாளர்கள் முதலில், காணொளித் தொலைபேசி அழைப்பின் மூலம் நண்பர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும்.

அப்போது, அவர்கள் பார்த்து ரசித்த பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம்...

இதன் வழி, மக்களின் தனிமையைப் போக்குவது நிறுவனத்தின் நோக்கம்.

அத்துடன், பயனீட்டளர்களுக்குக் கிருமித்தொற்று குறித்து துல்லியமான தகவல்களை வழங்க மேலும் நடவடிக்கை எடுத்துவருவதாக Instagram தெரிவித்தது.


அது, அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் பதிவுகளைத் தவிர,கிருமித்தொற்று குறித்து பதிவேற்றப்படும் மற்ற தகவல்களை அகற்றவுள்ளது.



 

Top