Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அருகிவரும் பூச்சி வகைகளுக்கு இடையில் பெருகிவரும் ஈக்கள், கரப்பான் பூச்சிகள்

உலகிலுள்ள பூச்சி வகைகளில் கிட்டத்தட்ட பாதி வேகமாகக் குறைந்து வருகின்றன.

வாசிப்புநேரம் -
அருகிவரும் பூச்சி வகைகளுக்கு இடையில் பெருகிவரும் ஈக்கள், கரப்பான் பூச்சிகள்

(படம்: Pixabay)

உலகிலுள்ள பூச்சி வகைகளில் கிட்டத்தட்ட பாதி வேகமாகக் குறைந்து வருகின்றன.

மூன்றில் ஒருபங்குப் பூச்சிகள் ஒட்டுமொத்தமாகவே அழிந்துபோகும் ஆபத்தில் உள்ளன.

அதனால், பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், இயற்கை உணவுச் சங்கிலிக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று சிட்னி பல்கலைக்கழகமும், சீன வேளாண் அறிவியல் கழகமும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரப்பான் பூச்சிகள், ஈக்கள் போன்ற பூச்சிகளின் எண்ணிக்கை மிதமிஞ்சி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட 73 ஆய்வு அறிக்கைகளைப் பரிசீலித்த பிறகு, அண்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றைக் காட்டிலும் தேனீக்கள், வண்டுகள், எறும்புகள் போன்றவை எட்டு மடங்கு வேகமாக அழிந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

தீவிரமான விவசாயம், பூச்சிக் கொல்லிப் பயன்பாடு, பருவநிலை மாற்றம் ஆகியன பூச்சிகளின் அழிவுக்குக் காரணம் என்று சுட்டப்படுகிறது.

என்றாலும், வேகமாக இனப்பெருக்கம் செய்யும் பூச்சிகள் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.

ஈக்களும், கரப்பான் பூச்சிகளும், மனிதர்களால் உருவாக்கப்படும் சூழலில் வசதியாகப் பெருகி வருகின்றன.

பூச்சிக் கொல்லிகளை எதிர்த்துத் தாக்குப்பிடிக்கும் ஆற்றலும் அவற்றுக்கு உண்டு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்