Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அறியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே!

அறியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே

வாசிப்புநேரம் -
அறியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே!

(படம்: AFP)

இத்தாலியின் பழமையான பாலத்தில் காப்பி கலக்கியதற்காக இரு சுற்றுப்பயணிகளுக்கு 950 யூரோ (சுமார் 1,500 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் வெனிஸில் (venice) இருக்கும் ரியால்டோ (Rialto) பாலத்திற்குச் சென்றிருந்தனர்.

காப்பி குடிக்க நினைத்த அவர்கள், பாலத்திலேயே உட்கார்ந்து காப்பி கலக்க விரும்பினார்கள்.

அவரிகளிடம் பயணம் செய்யும்போது பயன்படுத்தகூடியச் சமையல் இயந்திரம் இருந்தது.

அவர்கள் இயந்திரத்தில் காப்பி கலக்கத் தொடங்கினர்.

அவர்களின் செயல் காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுப்பயணிகளுக்கு அபராதம் விதித்ததோடு, அவர்களை நகரை விட்டு வெளியேறும்படியும் கூறப்பட்டது.

நகரின் மேயர் சுற்றுப்பயணிகளின் செயலை முறையற்ற நடத்தை என்று கூறி கண்டனம் தெரிவித்தார்.

பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதன் தொடர்பில் அண்மையில் வெனிஸ் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வெனிஸ் நகரை அவமதிப்பதுபோல் நடந்துகொள்வது தவறு என்று நகர மேயர் வலியுறுத்தினார்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்