Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானி அறையில் காப்பி கொட்டியதால் விமானம் அவசரத் தரையிறக்கம்

பறக்கும் விமானத்தில் விமானி எதிர்பாராத விதமாக விமானத்தின் கட்டுப்பாட்டு விசைப்பலகையில் காப்பியைக் கொட்டியதால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பறக்கும் விமானத்தில் விமானி எதிர்பாராத விதமாக விமானத்தின் கட்டுப்பாட்டு விசைப்பலகையில் காப்பியைக் கொட்டியதால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவின் கான்குன் நகருக்கு 326 பயணிகள் காண்டோர் (Condor) விமானத்தில் பயணம் செய்தனர்.

அயர்லாந்துக் குடியரசு அருகே விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் அறையில் உள்ள கட்டுப்பாட்டு விசைப்பலகையில் விமானி காப்பியைக் கொட்டினார். அதைத்தொடர்ந்து பலகையில் தீப்பொறிகள் வந்ததாகச் சந்தேகம் எழுந்தது.

உடனே அயர்லந்துக் குடியரசில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காப்பி கொட்டியதில் பலகையின் தொடர்பு, தகவல் சாதனங்கள் பாதிக்கப்பட்டன.

காப்பியைக் கொட்டிய விமானி விமானத்துறையில் அனுபவம் பெற்றவர் என்றும் பயணத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்