Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குளிர்பானத்தில் சர்க்கரை அளவு - கொக்க கோலாவின் நிலை

கொக்க கோலா நிறுவனத்தின் உண்மையான கோக் பானம் சர்க்கரையை மிக அதிக அளவில் கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
குளிர்பானத்தில் சர்க்கரை அளவு - கொக்க கோலாவின் நிலை

(படம்: CNA)

நீரிழிவு, உடற்பருமன் பிரச்சினைகளில் சர்க்கரையின் பங்கு அதிகம்.

சிங்கப்பூரில் மட்டும் என்றில்லை. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளிலும் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்துவருகிறது.

கொக்க கோலா நிறுவனத்தின் உண்மையான கோக் பானம் சர்க்கரையை மிக அதிக அளவில் கொண்டுள்ளது.

330 மில்லிலிட்டர் கேன் பானத்தில் 9 தேக்கரண்டி சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வகுத்திருக்கும் ஆரோக்கிய வழிகாட்டிகளின்படி ஒருவர் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு ஒரு நாளுக்கு 10 தேக்கரண்டியைத் தாண்டிக்கூடாது.

2020ஆம் ஆண்டுக்குள் குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரையின் அளவை 12 விழுக்காடு என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.

இங்குள்ள ஏழு பெரிய குளிர்பான நிறுவனங்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

பானத்தில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைப் பெரும்பாலோர் ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதுவதில்லை என்று கொக்க கோலா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் குயின்சி கூறுகிறார்.

அதேவேளையில் கொக்க கோலா போன்ற குளிர்பான நிறுவனங்களுக்கு அதிகமான ஆரோக்கியத் தெரிவுகளை உடனடியாக வழங்குவது சிரமமாக இருக்கலாம். என்றார்.

கொக்க கோலா நிறுவனம் தனது தயாரிப்புகளில் சில மாற்றங்கைளச் செய்வதில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறப்பட்டது.

தனது நிறுவனத்தின் செயல்கள் முற்றிலும் சரியானவை என்று சொல்லவில்லை. ஆனாலும் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாய் இருப்பதாகத் திரு. குயின்சி தெரிவித்தார்.

சில நிறுவனங்கள் மற்றதைவிட மேலும் தீவிரமாக இதைச் செயல்படுத்த வேண்டியுள்ளது.

அதனைக் கருத்திற்கொண்டு புதிய கோலா பானத்தில் அதிக முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

கொக்க கோலா பானத்தின் உற்பத்தி சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளில் ஈரிலக்க வளர்ச்சி கண்டுள்ளதையும் அவர் சுட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்