Images
  • Cold War
    (படம்:Yonhap/ REUTERS)

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு பனிப்போரை முடிவிற்குக் கொண்டுவரும்: தென்கொரிய அதிபர்


சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு 'வரலாற்றுச் சிறப்புமிக்கது' என்றும் பனிப்போரை முடிவிற்குக் கொண்டுவரும் என்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பாராட்டியுள்ளார்.

பனிப்போர் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் அதிபர் மூன் பெரும்பங்காற்றியுள்ளார்.

மாற்றத்திற்கான தைரியமான படியை எடுத்து வைத்ததற்குத் திரு. டிரம்ப்பையும் திரு. கிம்மையும் தென்கொரிய அதிபர் புகழ்ந்துள்ளார்.

இவ்வேளையில், வடக்கொரியாவுடன் பேச்சுகள் தொடரும் வேளையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சிகளை நிறுத்தப்போவதாக
அதிபர் டிரம்ப் வழங்கிய வாக்குறுதி கூறித்து தென் கொரியாவின் அதிபர் அலுவலகம், விளக்கம் கேட்க விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

உங்கள் கருத்து

Top