Images
  • dart frogs
    (படம்: AFP PHOTO / BOGOTA'S DISTRICT ENVIRONMENT SECRETARIAT / LUIS JARAMILLO)

கொலம்பியா விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட நச்சுத் தவளைகள் பறிமுதல்

கொலம்பியா தலைநகர் பொகோட்டாவிலுள்ள விமான நிலையத்தில் நச்சுத்தன்மை மிக்க 216 தவளைகள் நேற்று (நவம்பர் 7) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மிளிரும் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும் தவளைகள் திரைப்படச்சுருள்களை வைக்கும் பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

விமான நிலையத்தின் கழிப்பறையில் பை ஒன்றில் அந்த பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

தவளைகளைக் கடத்தல்காரர்கள் ஜெர்மனிக்குக் கடத்திச் செல்லவிருந்தனர்.

கறுப்புச் சந்தையில், தவளைகள் ஒவ்வொன்றும் 2000 டாலர் வரை விலைபோகுமென மதிப்பிடப்படுகிறது.  

Top