Images
  • Columbian mom 3
    (படம்: AFP/Luis Robayo)

கோமாவிலிருந்த போது குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

கொலம்பிய கர்ப்பிணி டயனா அங்கொலா, கொரோனா நோய்த்தொற்றியதால் சென்ற மாதம் 15ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மூன்று நாள்களுக்குப் பிறகு, அவருடைய நுரையீரலின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.


(படம்: AFP/Jose Luis Flor)

அந்த நிலையில், 14 வாரங்களுக்கு முன்பே அந்தப் பெண், குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரித்தெடுத்தனர். குழந்தை தற்போது பாதுகாப்புக் கருவியில் வைக்கப்பட்டுள்ளது.


(படம்: AFP/Luis Robayo)

தாய் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருந்தாலும், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு அந்தப் பாதிப்பு இல்லை. என்றாலும், குழந்தை மூச்சு விடத் திணறுவதால் மருத்துவர்கள் அக்கறையாகக் கவனித்து வருகின்றனர்.


(படம்: AFP/Luis Robayo)

கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து விட்ட டயானா, தம் குழந்தையுடன் வீடு திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

Top