Images
  • BLM
    (படம்: David Zalubowski/AP)

கறுப்பின ஆடவர் மரணம் தொடர்பில் மற்றொரு அமெரிக்க மாநிலத்தில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் இலைஜா மெக்லைன் (Elijah McClain) என்ற ஆப்பிரிக்க அமெரிக்க ஆடவரின் மரணம் தொடர்பாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட அவர்கள், மெக்லைனின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் நடத்தினர்.

காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதை 23 வயது மெக்லைன் எதிர்த்தபோது அதிகாரிகள் அவரது கழுத்துப் பகுதியில் அழுத்தியுள்ளனர்.

அத்துடன், மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் Ketamine மருந்தை ஊசியின் மூலம் மெக்லைன் உடலில் அவர்கள் செலுத்தினர்.

அதன் விளைவாக மெக்லைன் உயிரிழந்தார்.

சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீதான வன்முறையை எதிர்த்து அமெரிக்காவில் அண்மையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.



Top