Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மேடைநிகழ்ச்சியின்போது மாண்ட பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர்

இங்கிலாந்தின் ஒரு சிறிய நகரில் அவர் நிகழ்ச்சியின் பாதியில் மேடையில் அமர்ந்ததாக அங்கிருந்த இன்னொரு நடிகர் கூறினார்.

வாசிப்புநேரம் -
மேடைநிகழ்ச்சியின்போது மாண்ட பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர்

(படம்:Facebook@TheIanCognito)

பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் இயன் கொக்நிட்டோ (Ian Cognito), மேடையில் நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருந்தபோது மாண்டார்.

அவருக்கு வயது 60.

இங்கிலாந்தின் ஒரு சிறிய நகரில் அவர் நிகழ்ச்சியின் பாதியில் மேடையில் அமர்ந்ததாக அங்கிருந்த இன்னொரு நடிகர் கூறினார்.

அவ்வாறு கொக்நிட்டோ செய்தது, நிகழ்ச்சியின் ஓர் அங்கம் என்று பார்வையாளர்கள் நினைத்தனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு, அவருக்கு உடல் நலமில்லை என்று உணர்ந்த அவரது சக ஊழியர்கள் அவசர மருத்துவ வாகனத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

மருத்துவ உதவியாளர்கள் அங்கு வருவதற்கு முன்னர் அவர் மாண்டார்.

லண்டனில் பிறந்த கொக்நிட்டோ 1985ஆம் ஆண்டிலிருந்து நகைச்சுவை உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டில் அவரது நகைச்சுவைக்கு Time Out விருது வழங்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்