Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான நன்மதிப்புகள் மேலும் மேம்படவேண்டும்'

'காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான நன்மதிப்புகள் மேலும் மேம்படவேண்டும்' 

வாசிப்புநேரம் -
'காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான நன்மதிப்புகள் மேலும் மேம்படவேண்டும்'

(படம்: MCI)

பிணைப்புகள், உறவு, நம்பிக்கை -காமன்வெல்த் கூட்டமைப்பின் விழுமியங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

அவை மேலும் மேம்படவேண்டும் என்றார் அவர்.

காமன்வெல்த் நாடுகளைப் பொறுத்தவரை, வர்த்தகம், பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது;

ஆனால், மற்றொருபுறம் நாடுகளுக்கு இடையிலான நன்மதிப்புகள் மேம்படவேண்டும் என்றார் திரு லீ.

காமன்வெல்த் நாடுகள் அவற்றுக்கு இடையில் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும்; ஒருவர் மற்றொருவரின் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, சிக்கல்களுக்குப் பேசித் தீர்வு காணவேண்டும் என்றும் பிரதமர் லீ வலியுறுத்தினார்.

காமன்வெல்த் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு லண்டனில் நடைபெற்றது. அதன் நிறைவில், திரு லீ செய்தியாளர்களிடம் பேசினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்