Images
  • climate change
    படம்: AFP/Martin Bureau

பருவநிலை தொடர்பான பேரிடர்கள் - பொருளியல் இழப்பு வெகுவாக அதிகரிப்பு

பருவநிலை தொடர்பாக ஏற்படும் பேரிடர்களின் பொருளியல் செலவுகள் கடந்த இருபது ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

1978ஆம் ஆண்டிலிருந்து 1997ஆம் ஆண்டு வரை, அதன் தொடர்பான மொத்த இழப்பு 896 பில்லியன் டாலராகப் பதிவானது.

ஆனால் 1998ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை, அது 2.25 டிரில்லியன் டாலரை எட்டியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ஆக அதிகப் பொருளியல் இழப்பைச் சந்தித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.


Top