Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, உலகத் தலைவர்கள் முன்பு முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்'

பருவநிலை மாற்றத்தை முறியடிக்க, உலகத் தலைவர்கள் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி, COP26 மாநாட்டுத் தலைவர் ஆலோக் ஷர்மா (Alok Sharma) கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

பருவநிலை மாற்றத்தை முறியடிக்க, உலகத் தலைவர்கள் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி, COP26 மாநாட்டுத் தலைவர் ஆலோக் ஷர்மா (Alok Sharma) கேட்டுக்கொண்டுள்ளார்.

6 ஆண்டுக்கு முன் பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், வளரும் நாடுகளை மேம்படுத்துவதற்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் நிதி வழங்குதல் ஆகியவை உலக தலைவர்களின் வாக்குறுதிகளில் அடங்கும்.

நாடுகள் அவற்றை நிறைவேற்ற ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று திரு. ஷர்மா சொன்னார்.

குறிப்பாக, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மேலும் நிதி திரட்டும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.

COP26 எனும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடங்க இன்னும் 3 வாரங்கள் எஞ்சியுள்ளன.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கப் போதுமான கொள்கைகள் உருவாக்கப்படாமல் போய்விடும் என்று சுற்றுபுற ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்