Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காணாமல் போன மகனைக் காண விழித்திரைகளைத் தானம் செய்த தாய்

ஹாங்காங்:  தம்முடைய மறைவுக்கு பின்னரும் மகனைப் பார்க்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்று எண்ணி நோய்வாய்ப்பட்ட ஒரு தாய் தமது விழித்திரைகளைத் தானம் செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்: தம்முடைய மறைவுக்கு பின்னரும் மகனைப் பார்க்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்று எண்ணி நோய்வாய்ப்பட்ட ஒரு தாய் தமது விழித்திரைகளைத் தானம் செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன தமது மகனைப் பார்க்கும் எண்ணத்தில் அவ்வாறு செய்தார் 55 வயது மாது வாங் ஷிச்சின்.

கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தார் வாங். அவரது மகன், ஸு ஹாய், வாங்கின் கணவருடன் வாழ்ந்து வந்தார்.

1996இல் ஒருநாள் பள்ளி முடிந்து அவரது மகன் வீடு திரும்பவில்லை. அன்றிலிருந்து தமது மகனைத் தேட தொடங்கினார் வாங்.

கடந்த 20 ஆண்டுகளாக சீனாவின் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மகனைத் தேட முயன்றார்.

மகனைத் தெரியும் என்று கூறிய சிலரின் மோசடி வலையில் சிக்கியும் அவர் சிலமுறை ஏமாந்தார்.

சுமார் பத்தாண்டு காலமாக மார்பகப் புற்றுநோயால் அவதியுற்று வந்த வாங் தம்முடைய கண் விழித்திரைகளைத் தானம் செய்யுமாறு தமது தங்கையிடம் கூறியுள்ளார்.

தமது மகனைப் பற்றிய தகவல் ஏதும் இல்லாமல் கடந்த வாரம் மாண்டார் அவர்.

மரணப் படுக்கையிலும் மகனைப் பார்க்க ஏங்கிய அவர் விழிகள் மூடவில்லை. "மகனைத் தேடித் தருவேன்" என்ற தங்கையின் ஆறுதல் வார்த்தையைக் கேட்ட பிறகே அவர் உயிர் பிரிந்தது.

வாங்கின் விழித்திரைகள் இளையர்கள் இருவருக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்