Images
  • Us navy
    படம்: US Navy 

அமெரிக்க ராணுவக் கப்பலில் 3 கடலோடிகளுக்கு COVID-19 கிருமித்தொற்று

அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான Theodore Rooseveltஇல் இருந்த கடலோடிகள் மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது அவர்கள், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றுக்கு ஆளான மூவருடன் தொடர்பில் இருந்த கடற்படை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Theodore Roosevelt கப்பலில் கடற்படை அதிகாரிகள் சுமார் 5,000 பேர் உள்ளனர்.

விமானந்தாங்கிக் கப்பலின் செயல்பாட்டை முடக்கி வைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கடற்படைத் தலைவர் கூறினார்.  

Top