Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கோஸ்டா ரிக்கா: கொலம்பியாவிலிருந்து கடத்தப்பட்ட 4.3 டன் போதைப்பொருள் பறிமுதல்

கோஸ்டா ரிக்கா: கொலம்பியாவிலிருந்து கடத்தப்பட்ட 4.3 டன் போதைப்பொருள் பறிமுதல்

வாசிப்புநேரம் -

கொலம்பியாவிலிருந்து கடத்தப்பட்ட 4.3 டன் கொக்கேய்ன் போதைப்பொருளைக் கோஸ்டா ரிக்கா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்நாட்டில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிகமான போதைப்பொருள் அது.

அண்மைய ஆண்டுகளில் அதிக அளவில் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதால் கொலம்பியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போதைப்பொருள் கடத்த கோஸ்டா ரிக்கா இடைவழி மையமாகப் பயன்படுத்தப்படுவதாய் அஞ்சப்படுகிறது.

கோஸ்டா ரிக்கா அதிகாரிகள் சென்ற ஆண்டு மட்டும் 57 டன் கொக்கேய்னைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். இவ்வாண்டில் இதுவரை கஞ்சா, கொக்கேய்ன் இரண்டும் சேர்த்து 40 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்