Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் 20 மில்லியன் போலி முகக்கவசங்கள் பறிமுதல்

அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்பு அமைப்பு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சுமார் 20 மில்லியன் போலி முகக்கவசங்களைப் பறிமுதல் செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -

அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்பு அமைப்பு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சுமார் 20 மில்லியன் போலி முகக்கவசங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களில் N95, KN95 ரக முகக்கவசங்கப் போன்ற போலி முகக்கவசங்கள் பெருகிவிட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சொன்னார்.

கிருமித்தொற்று ஆரம்பமானதிலிருந்து 34 மில்லியனுக்கும் மேற்பட்ட போலி முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

N95 ரக முகக்கவசங்கள் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்கும் ஆற்றல் உடையவை. ஆனால், போலி முகக்கவசங்கள் அத்தகைய பாதுகாப்பு அளிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

N95 முகக்கவசங்களில் காணப்படும் சில பாதுகாப்பு அம்சங்கள் போலியானவற்றில் இல்லாமல் போகலாம் என்றும் கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்