Images
  • Vaccine
    படம்: REUTERS 

தடுப்புமருந்து பெறுவதில் பின்தங்கியிருக்கும் ஏழை நாடுகளுக்கு உதவவிருக்கும் COVAX திட்டம்

தடுப்புமருந்துகள் பெறுவதில் பொதுவாக ஏழை நாடுகள் பின் தங்கியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

ஆய்வுகளின்படி, 2009ஆம் ஆண்டு நிலவிய பன்றிக் காய்ச்சலுக்கான பெரும்பாலான தடுப்புமருந்துகளை வசதிமிக்க நாடுகள் முன்கூட்டியே பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

அதோடு, உலகின் 90 விழுக்காட்டுச் சுகாதாரம் சார்ந்த பொருள்கள் உலகின் 10 விழுக்காட்டு மக்களை மட்டுமே சென்றடைகின்றன. கொரோனா நோய்க்கான தடுப்புமருந்தும் அந்தக் கணக்கில் சேர்ந்துவிடும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அதனை மாற்ற, COVAX திட்டம், உலகமக்களுக்கு நியாயமான முறையில் தடுப்புமருந்தை விநியோகம் செய்ய விரும்புகிறது.

திட்டத்தில் கலந்து கொள்ளும் நாடுகளின் மக்கள்தொகையில் குறைந்தது 20 விழுக்காட்டினருக்குத் தடுப்புமருந்து கிடைப்பதை உறுதி செய்ய COVAX முற்படுகிறது.

தடுப்புமருந்து முதற்கட்டமாக மருத்துவ, சமூக ஊழியர்களுக்கு அளிக்கப்படும்.

65 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்புமருந்து வழங்கப்படும்.

கடைசியாக மற்றவர்களுக்கு அது தரப்படும். யார் யாருக்குத் தடுப்புமருந்து முக்கியமாகத் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அதைத் திட்டம் உறுதிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வசதிமிக்க நாடுகள் வசதி குறைந்த நாடுகளுக்குத் தடுப்புமருந்து வாங்கித் தரத் திட்டம் வழிவகுக்கிறது. இதுவரை சுமார் 186 நாடுகள் திட்டத்தில் இணைந்துள்ளன.  

Top