Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது

உலகெங்கும் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது.

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது

(படம்: AFP / Hoang Khanh)

உலகெங்கும் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது.

கடந்த 4 நாள்களில் புதிதாக ஒரு மில்லியன் பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு 4. 4 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; 150,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.

ஃபுளோரிடா மாநிலத்தில் தொடர்ந்து 3ஆவது நாளாக, மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250க்கும் அதிகமானோர் மாண்டனர்.

37 மாநிலங்களில் கிருமிப் பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்டது. சென்ற புதன் கிழமையான புள்ளிவிவரத்தின் படி, அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கிருமித்தொற்றால் மாண்டுபோவதாகக் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்