Images
  • covid donations

COVID-19: அனைவருக்கும் சிகிச்சை வழங்க 7 பில்லியன் டாலர் நிதி திரட்டிய உலக நாடுகள்

கொரோனா கிருமித்தொற்றுச் சோதனை, சிகிச்சை ஆகியவை தொடர்பில் அனைவருக்கும் பரவலான சமவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கு சுமார் 7 பில்லியன் டாலர் தொகை திரட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணையம், அமெரிக்கா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகள் நிதி வழங்கியுள்ளன.

அந்தத் தொகையைக் கொண்டு, பின்தங்கியுள்ளோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தப்படும்.

உலகெங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை நெருங்கிவரும் வேளையில் அவ்வாறு நிதி திரட்டப்பட்டுள்ளது.

Top