Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 நோய்த்தொற்று உலகளவில் குறைந்து வந்தாலும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது: உலகச் சுகாதார நிறுவனம்

உலகளவில் தினசரி நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உலகளவில் தினசரி நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதனால் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருமாத காலமாக, உலகளாவிய நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 16) மிகக் குறைவான எண்ணிக்கை பதிவானதாகவும் ராய்ட்டர்ஸ் (Reuters) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட ஊரடங்குகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை காரணமாகச் சம்பவங்களும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளன.

பாதுகாப்பைக் குறைப்பதற்கு இது நேரம் இல்லை, சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கும் சூழ்நிலையை நாம் அனுமதிக்க முடியாது

என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் COVID-19 நிபுணர் Maria Van Kerkhove ஜெனிவா மாநாட்டில் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்