Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் சமூக அளவில் COVID-19 பரவல் குறித்து மக்கள் கவலை

அமெரிக்காவில் COVID-19 கிருமி சமூக அளவில் பரவும் அச்சம் அதிகரிப்பதைத் தொடர்ந்து அங்கு மருத்துவப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் சமூக அளவில் COVID-19 பரவல் குறித்து மக்கள் கவலை

(படம்: NOEL CELIS/AFP)

அமெரிக்காவில் COVID-19 கிருமி சமூக அளவில் பரவும் அச்சம் அதிகரிப்பதைத் தொடர்ந்து அங்கு மருத்துவப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அமெரிக்க நோய்க் கட்டுபாட்டு, தடுப்பு நிலையம் பொதுச் சுகாதார ஆய்வுக்கூடங்களுடன் இணைந்து சளிக்காய்ச்சல் அறிகுறிகள் கொண்டவர்களைக் கண்காணித்து வருகிறது.

லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ, சியேட்டல், சிக்காகோ, நியூயார்க் நகரங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களில் முதலில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் பல இடங்களில் அந்தப் பணிகளைத் தொடரவும் திட்டமுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 15 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உள்ளது. சுமார் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்