Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கரையொதுங்கிய சடலத்தில் COVID-19 நோய்த்தொற்று; பயணங்களை ரத்து செய்த வனுவாட்டு

பசிஃபிக் பெருங்கடலின் தென்பகுதியில் உள்ள வனுவாட்டு (Vanuatu) தீவுகளுக்குச் சோதனை.

வாசிப்புநேரம் -
கரையொதுங்கிய சடலத்தில் COVID-19 நோய்த்தொற்று; பயணங்களை ரத்து செய்த வனுவாட்டு

(கோப்புப் படம்: AFP/Torsten Blackwood)

பசிஃபிக் பெருங்கடலின் தென்பகுதியில் உள்ள வனுவாட்டு (Vanuatu) தீவுகளுக்குச் சோதனை.

அங்கு கரையொதுங்கிய சடலத்தைச் சோதித்தபோது, அது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, கிருமிப்பரவல் அறவே இல்லை என்று முடிவு செய்திருந்த வனுவாட்டு தீவுகள், பயணங்களை ரத்து செய்திருக்கிறது.

தீவுகளின் ஆகப் பெரிய நகரான போர்ட் விலாவிலிருந்து (Port Vila) 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தின் கரையில், சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அது பிலிப்பீன்ஸைச் சேர்ந்த மாலுமி ஒருவரது சடலம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

அவரது கப்பல், அதற்கு ஒரு நாள் முன்னதாக போர்ட் விலாவிலிருந்து புறப்பட்டிருந்தது.

அந்த ஆடவர் எங்கு, எவ்வாறு மாண்டார் என்பதும் அவரது சடலம் கடலில் விழுந்தது எப்படி என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

சடலத்தைக் கண்டெடுத்தவர்கள், மாண்டவருடன் தொடர்புடையவர்கள் எவருக்கும் இதுவரை கிருமி பரவவில்லை.

200,000 பேர் வசிக்கும் வனுவாட்டு தீவுகளில் கிருமிப்பரவல் ஏற்படாமல் இருக்க, ஆவன செய்து வருவதாக அரசாங்கம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்