Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா : 2 கொரில்லாக்களிடம் கிருமித்தொற்று உறுதி

கலிஃபோர்னியாவின் சான் டியாகோ விலங்குத் தோட்டத்தில் உள்ள இரண்டு கொரில்லாக்களிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

கலிஃபோர்னியாவின் சான் டியாகோ விலங்குத் தோட்டத்தில் உள்ள இரண்டு கொரில்லாக்களிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த இரண்டு கொரில்லாக்களுக்கும் சென்ற மாதம் இறுமல் ஏற்பட்டது. வேறொரு கொரில்லாவுக்கும் இலேசான அறிகுறி தென்பட்டது. பிறகு,நடத்தப்பட்ட பரிசோதனையில் இரண்டு கொரில்லாக்களுக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாக கலிஃபோர்னிய ஆளுநர் கவின் நியுஸ்கம் (Gavin Newscom) கூறினார்.

நோய்த்தொற்று அறிகுறி தென்படாத ஊழியரிடமிருந்து கொரில்லாக்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மனித மரபணுவில் 98 விழுக்காட்டைக் கொரில்லாக்கள் கொண்டிருக்கின்றன.

தென் கலிஃபோர்னியாவில் கிருமிப்பரவல் அதிகரித்ததால், சான் டியாகோ விலங்குத் தோட்டம், கொரில்லாக்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சென்ற ஆண்டு டிசம்பரில் மூடியது.

கொரில்லாக்களுக்கு அருகே செல்லும் ஊழியர்கள் முகக்கவசம் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று விலங்குத் தோட்டம் அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்