Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'COVID-19 தடுப்பு மருந்துக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பது, உலகப் பொருளியல் மீட்சியைத் துரிதப்படுத்தலாம்'

உலக நாடுகள்  COVID-19 தடுப்பு மருந்துக்கு உறுதியாக ஒத்துழைப்பது,  உலகப் பொருளியல் மீட்சியைத் துரிதப்படுத்தக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜியேவா (Kristalina Georgieva) கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
'COVID-19 தடுப்பு மருந்துக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பது, உலகப் பொருளியல் மீட்சியைத் துரிதப்படுத்தலாம்'

(கோப்புப் படம்: REUTERS)

உலக நாடுகள் COVID-19 தடுப்பு மருந்துக்கு உறுதியாக ஒத்துழைப்பது, உலகப் பொருளியல் மீட்சியைத் துரிதப்படுத்தக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜியேவா (Kristalina Georgieva) கூறியுள்ளார்.

வலுவான ஒத்துழைப்பின் மூலம், 2025ஆம் ஆண்டுக்குள் உலக வருமானம், 8 டிரில்லியன் டாலர் உயரக்கூடுமென அவர் சொன்னார்.

தடுப்புமருந்துகள் உலகம் முழுவதும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருவாட்டி ஜியார்ஜியேவா வலியுறுத்தினார்.

அதன் மூலம் பயணம், முதலீடு, வர்த்தகம் ஆகிய நடவடிக்கைகளில் நம்பிக்கை அதிகரிக்கும் என்றார் அவர்.

1930இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் மந்தநிலைக்குப் பிறகு, உலகப் பொருளியல் இவ்வாண்டு ஆக மோசமாக 4.4 விழுக்காடு சுருங்கும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்துள்ளது.

ஆனால் ஜூன் மாதத்தில் அந்த முன்னுரைப்பு 0.8 விழுக்காடு மேல்நோக்கித் திருத்தப்பட்டது.

சீனாவில் கிருமித்தொற்று நிலவரம் எதிர்பார்த்ததை விட விரைவாக தணிந்ததும், அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் வழங்கப்பட்ட நிவாரண உதவியாலும் அது முன்னேற்றம் கண்டதாக அனைத்துலகப் பண நிதியம் குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்