Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 நோய்த்தொற்றின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும்: உலகச் சுகாதார நிறுவனம்

COVID-19 நோய்த்தொற்றின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 நோய்த்தொற்றின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும்: உலகச் சுகாதார நிறுவனம்

(கோப்புப் படம்: AFP)

COVID-19 நோய்த்தொற்றின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

" இந்த நோய்த்தொற்று ஒரு நூற்றாண்டில் ஒரே முறை ஏற்படும் ஒரு சுகாதார நெருக்கடி. எனினும் அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்"

என்று நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.

கிருமித்தொற்று பற்றி மேலும் அதிகமான தகவல் சேகரிக்கப்பட்டிருந்தாலும் பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

"கிருமிப்பரவலின் மோசமான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக எண்ணிய பல நாடுகளில், நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது. தொடக்கத்தில் குறைவான பாதிப்பை எதிர்நோக்கிய நாடுகளில் இப்போது மாண்டோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கிறது" என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

கிருமித்தொற்றால் 17 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

670,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

150க்கும் மேலான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தை ஆராய்ந்து வருகின்றன.

இருப்பினும், அவை அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் மட்டுமே சிகிச்சைக்குத் தயாராக இருக்கும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்