Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 நோய்த்தொற்றை முறியடிக்கும் நிலையை நெருங்கக்கூட இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்

COVID-19 நோய்த்தொற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும் நிலையை நெருங்கக்கூட இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
COVID-19 நோய்த்தொற்றை முறியடிக்கும் நிலையை நெருங்கக்கூட இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்

(கோப்புப் படம்: REUTERS/Denis Balibouse)

COVID-19 நோய்த்தொற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும் நிலையை நெருங்கக்கூட இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.

சீனா ஒரு புதுவிதமான கிருமித்தொற்றைப் பற்றி நிறுவனத்திற்குத் தகவல் அளித்து 6 மாதம் ஆகிவிட்டது.

அதற்குள் 10 மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்கள், சுமார் 500,000 மரணங்கள் நேர்ந்துள்ளதை அவர் சுட்டினார்.

பெரும்பாலானோர் நோய்த்தொற்றால் எளிதில் பாதிப்படையக்கூடும். அதனால், கிருமிப்பரவல் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு என்று அவர் தெரிவித்தார்.

சில நாடுகள் கிருமிப்பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், உலக அளவில் அது அதிகரித்துவருவதாக அவர் கூறினார்.

பாதுகாப்பான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் இருந்தாலும், அது வெற்றிகரமாக அமையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என நிறுவனத்தின் அவசரகாலத் திட்டத்துக்கான தலைவர் மைக் ரயன் (Mike Ryan) குறிப்பிட்டார்.

அதுவரை நாடுகள் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தச் சோதனை செய்வது, கிருமித்தொற்றுக்கு ஆளானோரையும் அவர்களோடு தொடர்பில் இருந்தோரையும் தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்