Images
  • injection
    கோப்புப்படம்: Reuters/Eric Gaillard

ஜெர்மனியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொலை - மருத்துவர் கைது

ஜெர்மனியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

அந்நாட்டின் ஏசன் (Essen) நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் சம்பவம் நேர்ந்தது.
கவலைக்கிடமான நிலையில் இருந்த நோயாளிகள் இருவருக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஊசியை அவர் செலுத்தியதாக நம்பப்படுகிறது.

நோயாளிகளில் ஒருவரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நகரக் காவல்துறையினர் கூறினர்.

நோயாளி, அவருடைய குடும்பத்தார் ஆகியோரின் வேதனைக்கு முடிவுகட்ட எண்ணியதாய் மருத்துவர் கூறினார்.

நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு முன்னர், மருத்துவர் அவர்களுடைய குடும்பத்தாரின் அனுமதியைப் பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

இருப்பினும், அது உண்மையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜெர்மனியில் நோயாளியின் ஒப்புதலைப் பெற்று கருணைக் கொலை செய்வதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு.

அந்தச் சட்டம் சென்ற ஆண்டு நடப்புக்கு வந்தது. 

Top