Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமிப்பரவல் எங்கிருந்து தொடங்கியது? சீனாவுக்கு மீண்டும் நெருக்குதல் கொடுக்கும் அமெரிக்கா

COVID-19 கிருமிப்பரவல் எங்கிருந்து தொடங்கியது? சீனாவுக்கு மீண்டும் நெருக்குதல் கொடுக்கும் அமெரிக்கா

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமிப்பரவல் எங்கிருந்து தொடங்கியது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்கா சீனாவுக்கு மீண்டும் நெருக்குதல் அளித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Anthony Blinken), சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பேராளருமான யாங் ஜைசீயுடன் (Yang Jiechi) தொலைபேசியில் உரையாடினார்.

அலாஸ்காவில் கடந்த மார்ச் மாதம் இரு அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அதையடுத்து தொலைபேசியில் முதன் முறையாக அவர்கள் உரையாடினர்.

சீனா இன்னும் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய திரு. பிளிங்கன், COVID-19 விவகாரத்தில் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டினார்.

அதன் ஒரு பகுதியாக உலகச் சுகாதார நிறுவனம் கிருமியின் தோற்றம் குறித்து ஆராய அதன் நிபுணர்களை மீண்டும் சீனாவுக்கு அனுப்ப பெய்ச்சிங் அனுமதிக்கவேண்டும் என்றார் அவர்.

சீன ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து கொரோனா கிருமி கசிந்தது என்ற அமெரிக்காவின் கூற்று அபத்தமானது எனத் திரு. யாங் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்