Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதிக்கத் தயாராகும் ஜப்பானிய மருந்து நிறுவனம்

COVID-19 தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதிக்கத் தயாராகும் ஜப்பானிய மருந்து நிறுவனம்

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதிக்கத் தயாராகும் ஜப்பானிய மருந்து நிறுவனம்

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

ஜப்பானிய மருந்தாக்க நிறுவனமான ஷியோனோகி (Shionogi), COVID-19 நோய்க்கான தடுப்பு மருந்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் சோதிக்கத் தயாராகிவருகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை, முதல், இரண்டாம் கட்டச் சோதனைகள் நடைபெறும்.

ஆனால், ஜப்பானில் போதிய அளவில் COVID-19 நோயாளிகள் இல்லாததால், மூன்றாம் கட்டச் சோதனைகளை வெளிநாடுகளில் நடத்த, நிறுவனம் திட்டமிடுகிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், 30 மில்லியன் பேருக்குத் தேவையான அளவில் தடுப்பு மருந்தைத் தயாரிக்க அது இலக்கு கொண்டுள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் ஜப்பானில் அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) உறுதி கூறியிருந்தார்.

அதன் தொடர்பில், AstraZeneca, Pfizer உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஜப்பான் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

Shionogi நிறுவனத்துக்கு அதன் தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் சுமார் 400 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்