Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்புமருந்து ஒப்புதல் பெறும் முன்னரே அதை 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கும் அமெரிக்கா

அமெரிக்கா, Moderna நிறுவனம் தயாரிக்கவுள்ள COVID-19 தடுப்புமருந்தை வாங்குவதற்கான 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்புமருந்து ஒப்புதல் பெறும் முன்னரே அதை 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கும் அமெரிக்கா

(கோப்புப் படம்: AFP/Ben Stansall)

அமெரிக்கா, Moderna நிறுவனம் தயாரிக்கவுள்ள COVID-19 தடுப்புமருந்தை வாங்குவதற்கான 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.

தடுப்புமருந்துகளின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டு, அவை அங்கீகாரம் பெற்ற பின்னர், 100 மில்லியன் தடுப்பூசிகளை Moderna நிறுவனம் வாஷிங்டனுக்கு வழங்கும்.

ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா மேலும் 400 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடியும்.

இறுதி கட்டச் சோதனையில் உள்ள அந்தத் தடுப்புமருந்தை அடுத்த மாதத்திற்குள் தயார்செய்வது Moderna நிறுவனத்தின் திட்டம்.

ஆய்வுக்கூடங்ளில் தயாரிக்கப்படும் ஆறு COVID-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்காக சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள முன்பதிவு ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்