Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லாப்ஸ்டர்களுக்கும் நண்டுகளுக்கும் வலி உண்டு: ஆய்வு

லாப்ஸ்டர்களுக்கும் (Lobster), நண்டுகளுக்கும் வலி தெரியும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
லாப்ஸ்டர்களுக்கும் நண்டுகளுக்கும் வலி உண்டு: ஆய்வு

(படம்: Pixabay)

லாப்ஸ்டர்களுக்கும் (Lobster), நண்டுகளுக்கும் வலி தெரியும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவற்றை உயிருடன் கொதிக்கவைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுகுறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

London School of Economics மேற்கொண்ட ஆய்வில் 300 அறிவியல் ஆராய்ச்சிப் படைப்புகள் பரிசீலிக்கப்பட்டன.

அதில் லாப்ஸ்டர்கள், கணவாய்கள், நண்டுகள் போன்ற கடலுணவு வகைகளுக்கு வலியை உணரக்கூடிய தன்மை உண்டு என்று நிரூபிக்கப்பட்டது.

பிரிட்டனில் தற்போது பரிசீலிக்கப்படும் புதிய விலங்குநலச் சட்டத்துக்குக்கீழ் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆய்வில் லாப்ஸ்டர்கள், கணவாய்கள், நண்டுகள் போன்றவற்றை கையாள்வது குறித்தும் ஆராயப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்