Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுயமாகவே இனப்பெருக்கம் செய்யும் நண்டு வகை

இவ்வகைக் கடல் நண்டு இனப்பெருக்கம் செய்வதற்கு ஆண் நண்டு இனம் தேவையில்லையாம்.

வாசிப்புநேரம் -
சுயமாகவே இனப்பெருக்கம் செய்யும் நண்டு வகை

(படம்: Facebook)


இவ்வகைக் கடல் நண்டு இனப்பெருக்கம் செய்வதற்கு ஆண் நண்டு இனம் தேவையில்லையாம்.

Slough crayfish இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஆண் நண்டிற்குப் பிறந்த பெண் கடல் நண்டின் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்களால் அது இனப்பெருக்கம் செய்வதற்கு ஆண் நண்டு தேவைப்படுவதில்லை.

இதனால் அதன்வழி வந்த கடல் நண்டுகள் அனைத்தும் ஆண் துணை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலைப் பெற்றன.

இந்நண்டுகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு எதிரான எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவை வடஅமெரிக்காவில் விற்கப்படுகின்றன.

சுயமாக இனப்பெருக்கம் செய்யும் இந்நண்டுகள் இப்பொழுது marbled crayfish என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவை ஜப்பான், மடகாஸ்கர், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இயற்கையாகக் கண்டுபிடிக்கப்படலாம்.

சுயமாக இனப்பெருக்கம் செய்வதால் இவற்றின் எண்ணிக்கை அதீத வேகத்தில் அதிகரிக்கின்றன.

நண்டுகளின் இனப்பெருக்கத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம் புற்றுநோய்க் கட்டிகள் எப்படி உடம்பில் பரவுகின்றன என்பதைப் பற்றி அறியலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்