Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒவ்வொரு வாரமும் நாம் ஒரு கடன்பற்று அட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொண்டு வரக்கூடும்-ஆய்வு

உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் வரையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளக்கூடுமென நம்பப்படுகிறது. அது, ஒரு  கடன்பற்று அட்டையைச் சாப்பிடுவதற்குச் சமம். 

வாசிப்புநேரம் -
ஒவ்வொரு வாரமும் நாம் ஒரு கடன்பற்று அட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொண்டு வரக்கூடும்-ஆய்வு

(படம்: Pixabay)

உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் வரையிலான
பிளாஸ்டிக்கை உட்கொள்ளக்கூடுமென நம்பப்படுகிறது. அது, ஒரு
கடன்பற்று அட்டையைச் சாப்பிடுவதற்குச் சமம்.

அனைத்துலகச் சுற்றுப்புற அற அமைப்பான WWF நடத்திய ஆய்வில் அது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Newcastle பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. குடிநீர் மூலமாகவே, ஆக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சென்று சேருகிறது.

அதற்கு அடுத்தபடியாக, shellfish எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் போகிறது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை மொத்தமாக உட்கொள்வதால், அவற்றின் செரிமான மண்டலத்தில் உள்ள பிளாஸ்டிக், மனிதர்களின் வயிற்றுக்கும் செல்கிறது.

ஈராயிரமாம் ஆண்டுக்குப் பிந்திய உலகில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு, அதற்கு முந்திய எல்லா ஆண்டுகளிலும் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவுக்குச் சமம் என்றது ஆய்வு. குடிநீரில் இருந்துமட்டும் சராசரியாக ஒருவர், 1,769 பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவில் சோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில், சுமார் 95 விழுக்காட்டு மாதிரிகளில், பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்புநோக்க, ஐரோப்பிய நாடுகளில் சுமார் 72 விழுக்காட்டு மாதிரிகளில் மட்டுமே பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தன.

இடத்துக்கு இடம் பிளாஸ்டிக் கலப்படத்தின் அளவு வேறுபடுகிறதே தவிர, பிளாஸ்டிக் கலப்படம் இல்லாத இடம் என ஏதுமில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்