Images
  • Croc Attack
    (படம்: AFP/GREG WOOD)

முதலைகள் உலவும் காட்டில் 3 வாரம் சிக்கித் தவித்த ஆடவர்

ஆஸ்திரேலியா: முதலைகள் பெருமளவு ஊர்ந்து திரியும் காட்டில், 3 வாரங்கள் சிக்கித் தவித்த ஆடவர் மீட்கப்பட்டார்.

மிலான் லெமிக் என்ற 29 வயது ஆடவர், டிசம்பர் 22-ஆம் தேதி காணாமல்போனார்.

அன்று குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குப் பயணம் செய்தபோது, பாதி வழியில் அவருடைய வாகனம், திடீரென நின்றுவிட்டது.

நடுக்காட்டில் யாருமில்லை.... உதவிக்கு யாரும் இல்லை.

லெமிக் காணாமல்போனதை அறிந்த காவல்துறையினார், அவரைத் தேடத் தொடங்கினர். சில நாட்களில் அவரைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். காட்டிலிருந்த போது பழங்களைச் சாப்பிட்டுத் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார் லெமிக்.  

Top