Images
  • Crocodile Attack
    (படம்: AFP/GREG WOOD)

ஆஸ்திரேலியா: முதலை தாக்கி மாண்ட பெண்ணின் உடல் மீட்பு


ஆஸ்திரேலியாவில் இயற்கை வனங்களைப் பாதுகாக்கும் பழங்குடி இன அதிகாரி ஒருவர் முதலை தாக்கி மாண்டார்.

மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் அந்தப் பெண் அதிகாரி முதலையால் தாக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில், அந்தப் பழங்குடி இனப் பெண் அதிகாரி காணாமற் போனதாக நேற்று (அக்டோபர் 12) புகார் பதிவு செய்யப்பட்டது.

டார்வின் நகருக்குச் சுமர் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன் கன் (Gan Gan) கிராமத்தில் முதலை, பெண்ணைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

இடுப்பளவு இருந்த ஆற்று நீரில் மீன் பிடிக்கக் குடும்பத்துடன் சென்றிருந்தார் பெண்.

அப்பொழுது தண்ணீரில் சலசலப்புச் சத்தம் கேட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் பெண் காணாமற்போனதைக் கவனித்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து குடும்பத்தினர் அதிகாரிகளிடம் புகார் செய்திருந்தனர்.

அவ்வட்டார அதிகாரிகள் முதலையைக் கொன்று பெண்ணின் உடலை மீட்டனர்.

 

Top