Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: துறைமுகத்தில் அணையக் காத்திருக்கும் சொகுசுக் கப்பல் பயணிகள்

COVID-19: துறைமுகத்தில் அணையக் காத்திருக்கும் சொகுசுக் கப்பல் பயணிகள்

வாசிப்புநேரம் -

தென் அமெரிக்காவின் பசிபிக் கரை அருகில் உள்ள சொகுசுக் கப்பலில் 1,800க்கும் மேலானோர் சிக்கியுள்ளனர்.

கப்பல் எங்காவது அணைய அனுமதி கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கும் அந்தப் பயணிகளில் 42 பேரிடம் சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்ச் 7 அன்று அர்ஜன்ட்டினாவின் தலைநகரிலிருந்து கிளம்பிய The Zaandam சொகுசுக் கப்பல் கடந்த சனிக்கிழமை சிலியின் சென் அன்ட்டோனியோ நகரைச் சென்றடைய வேண்டியது.

ஆனால் COVID-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பல்கள் வரிசையில் இக்கப்பலும் இடம்பிடித்துள்ளது.

சிலி துறைமுகத்தில் அந்நாட்டுக் குடிமக்கள் 9 பேர் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

உடல்நலப் பிரச்சினைகள் இருந்த இரு பிரெஞ்சு நாட்டவரும் அங்கு இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

கப்பலில் மொத்தம் 1,200க்கும் அதிகமான பயணிகளும் கிட்டத்தட்ட 600 ஊழியர்களும் உள்ளனர்.

மார்ச் 30க்குள், ஃபுளோரிடா மாநிலத்தின் Fort Lauderdale சென்றடைந்தால் அங்கிருந்து அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்லலாம் என்பது திட்டம்.

அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்