Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுக்குச் சென்றவர்களுக்கு உலகளவில் சொகுசுக் கப்பல்களில் தடை

அண்மையில் சீனாவிற்குச் சென்றவர்களுக்கு உலகளவில் சொகுசுக் கப்பல்களில் தடை விதிப்பதாக அந்தத் துறையின் உலக நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவுக்குச் சென்றவர்களுக்கு உலகளவில் சொகுசுக் கப்பல்களில் தடை

(படம்: FILIPPO MONTEFORTE / AFP)

அண்மையில் சீனாவிற்குச் சென்றவர்களுக்கு உலகளவில் சொகுசுக் கப்பல்களில் தடை விதிப்பதாக அந்தத் துறையின் உலக நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

நொவல் கொரோனா கிருமித்தொற்று பரவும் அச்சத்தில் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கிருமிகள் வெகுவாகப் பரவக்கூடிய சொகுசுக் கப்பல்களில் கிருமித்தொற்று சம்பவம் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சொகுசுக் கப்பல்துறை எடுத்துவருவதாக அமைப்பு கூறியது.

கடந்த 14 நாள்களாகத் தலைநிலச் சீனாவுக்குச் சென்ற பயணி அல்லது சொகுசுக் கப்பல் ஊழியர்கள் கப்பல்களினுள் நுழைவதிலிருந்து தடைசெய்யப்படுவர்.

அனைத்துப் பயணிகளும் சோதிக்கப்பட்ட பின்னர் கப்பலினுள் அனுமதிக்கப்படுகின்றனர். கப்பல் பயணங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன.

சுகாதார அவசரநிலை ஏற்பட்டால், அதனைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக அமைப்பு தெரிவித்தது.

சொகுசுக் கப்பல் ஒன்றில் இரு சீனச் சுற்றுப்பயணிகள் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் சொகுசுக் கப்பல் ஒன்றின் 6,000 பயணிகள் இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்குக் கொரோனா கிருமித்தொற்று இல்லயென ரத்தப் பரிசோதனையில் பின்னர் உறுதிசெய்யப்பட்டது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்