Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பியக் கடற்பயணத்தில் சில சுற்றுலாத்தலங்களை ரத்துசெய்ததால் பயணிகள் கோபம்

ஐரோப்பியக் கடற்பயணத்தில் சில சுற்றுலாத்தலங்களை ரத்துசெய்ததால் Norwegian Cruise Line நிறுவனத்தின் மீது பயணிகள் சினமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஐரோப்பியக் கடற்பயணத்தில் சில சுற்றுலாத்தலங்களை ரத்துசெய்ததால் பயணிகள் கோபம்

(படம்: Reuters)

ஐரோப்பியக் கடற்பயணத்தில் சில சுற்றுலாத்தலங்களை ரத்துசெய்ததால் Norwegian Cruise Line நிறுவனத்தின் மீது பயணிகள் சினமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் சவுத்தம்ப்ட்டன் நகரிலிருந்து புறப்பட்ட கப்பல்,
இரண்டு வாரப் பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்ஸ்ட்டர்டேமிலும் ஐஸ்லந்திலும் நின்றிருக்க வேண்டும். ஆனால் மோசமான வானிலை காரணமாக ரத்துசெய்ய நேரிட்டதாக நிறுவனம் குறிப்பிட்டது.

CNN செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

ரத்துசெய்யப்பட்டவற்றுக்குப் பதிலாக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தது நிறுவனம். ஆனால் பின்னர் அதுவும் இல்லை என்று கூறியதும் கொதித்துப் போயினர் பயணிகள்.

பணத்தைத் திருப்பிக்கொடுக்குமாறு கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 7) அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்தது Norwegian Cruise Line நிறுவனம். அடுத்த கப்பற்பயணத்துக்கான கட்டணத்தில் 25 விழுக்காடு கழிவு கொடுக்கவும் அது முன்வந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்