Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கியூபா: இர்மா சூறாவளிக்கு அஞ்சி 10,000 சுற்றுப் பயணிகள் வெளியேற்றம்

கியூபா, இர்மா சூறாவளி குறித்த அச்சத்தால், அதன் கரையோர உல்லாச விடுதிகளிலிருந்து சுமார் 10,000 சுற்றுப் பயணிகளை வெளியேற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
கியூபா: இர்மா சூறாவளிக்கு அஞ்சி 10,000 சுற்றுப் பயணிகள் வெளியேற்றம்

(படம்: AFP)

கியூபா, இர்மா சூறாவளி குறித்த அச்சத்தால், அதன் கரையோர உல்லாச விடுதிகளிலிருந்து சுமார் 10,000 சுற்றுப் பயணிகளை வெளியேற்றியுள்ளது.

அத்துடன் அங்கு பேரிடர் விழிப்புநிலையும் அதன் உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கியூபாவின் தலைநகர் ஹவானா, இர்மா சூறாவளியின் பாதையிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வக அதிகாரிகள் கூறியிருந்தாலும், அந்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் கனடாவைச் சேர்ந்தவர்கள்.

கனடாவின் சுற்றுப்பயண முகவர்களும் அண்மை நாட்களாகத் தங்கள் வாடிக்கையாளர்களைக் கனடாவுக்கே திருப்பி அனுப்புவதாகக் கூறப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்