Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகக் காணப்படும் ஜப்பானிய நச்சுக் காளான்

உலகின் ஆக அபாயமான நச்சுக் காளான்களில் ஒன்று Poison Fire Coral.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகக் காணப்படும் ஜப்பானிய நச்சுக் காளான்

(படம்: AFP/Ray PALMER)

உலகின் ஆக அபாயமான நச்சுக் காளான்களில் ஒன்று Poison Fire Coral.

கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் அந்தக் காளான் ஜப்பான், கொரியா ஆகியவற்றைப் பூர்வீகமாகக் கொண்டது.

Cairns புறநகர்ப் பகுதியில் அதனைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் அதனை Poison Fire Coral நச்சுக்காளான் என்று உறுதிப்படுத்தியதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் அது கணிசமாகப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Poison Fire Coral காளானில் உள்ள நச்சுப்பொருள்கள் நம் தோலின்வழி உடலில் உறிஞ்சப்படும்.

அதை உட்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடலுறுப்புகள் மரத்துப்போதல் உள்ளிட்ட அச்சுறுத்தும் அறிகுறிகள் ஏற்படும்.

உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பல்வேறு உடலுறுப்புகள் செயலிழந்துபோகலாம்; மூளை சேதமுறுவதால் மரணம் விளையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் காளானைப் போன்றே தோற்றமளிப்பதால் சிலர் அதனைத் தேநீரைப் போல் அருந்தி மாண்ட சம்பவங்களும் உண்டு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்