Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 பற்றிய பொய்த்தகவல்களால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 800 பேர் மரணம் -ஆய்வு

COVID-19 பற்றிய பொய்த்தகவல்களால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 800 பேர் மாண்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 பற்றிய பொய்த்தகவல்களால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 800 பேர் மரணம் -ஆய்வு

(படம்: AFP/Money SHARMA)

COVID-19 பற்றிய பொய்த்தகவல்களால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 800 பேர் மாண்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய பொய்த்தகவலின் விளைவாகச் சுமார் 5,800 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக American Journal of Tropical Medicine and Hygiene சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

பலர் methanol அல்லது சாராயச் சத்து கொண்ட கிருமிநீக்கப் பொருள்களைக் குடித்து மாண்டனர். அவை கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் உட்கொள்ளப்பட்டன.

நோய்த்தொற்று பரவும் வேகத்துக்கு ஈடாக, அது பற்றிய பொய்யான தகவல்களும் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

கிருமித்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக அளவில் பூண்டு சாப்பிடுவது அல்லது வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது போன்ற ஆலோசனைகளை மாண்ட பலர் பின்பற்றினர். சிலர் கோமியம் போன்றவற்றையும் குடித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

பொய்த்தகவலின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அனைத்துலக அமைப்புகள், அரசாங்கங்கள், சமூக ஊடகத் தளங்கள் ஆகியவை பொறுப்பு வகிக்க வேண்டும் என்று ஆய்வின் முடிவு சுட்டியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்