Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: மாண்டோர் எண்ணிக்கை 21,000-க்கு அதிகரிப்பு

உலக அளவில் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 21,000ஐத் தாண்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
COVID-19: மாண்டோர் எண்ணிக்கை 21,000-க்கு அதிகரிப்பு

(படம்: AFP/ANDREA PATTARO)

உலக அளவில் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 21,000ஐத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அரை மில்லியனை நெருங்கி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் இணையம் வழி இன்று கலந்தாலோசிக்கவிருக்கின்றனர்.

கிருமிப்பரவலால் உலகில் சுமார் 3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் உலகப் பொருளியல் ஆக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவதாகவும், உலகத் தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவனிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எழைகளுக்கு உதவ சுமார் 2 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டது.

COVID-19 கிருமித்தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 1,000க்கும் அதிகமானோர் மாண்டனர். 70,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்