Images
  • florida michael
    (படம்: REUTERS/Carlo Allegri)

சூறாவளியால் தாக்கப்பட்ட அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம்

நூறாண்டு காணாத ஆக வலுவான சூறாவளி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் கடற்கரையைத் தாக்கியுள்ளது.

மைக்கல் எனும் அழைக்கப்படும் அந்தச் சூறாவளி பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் முன்னெச்சரித்துள்ளனர்.

மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் கொண்ட காற்றோடு அதிகமான மழையும் பெய்யும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், மிகப் பெரிய அழிவை மைக்கல் சூறாவளி ஏற்படுத்தக்கூடும் என்று ஃபுளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் (Rick Scott) கூறியுள்ளார்.

கடர்கறையை ஒட்டிய பகுதிகளில் வசிபோர் சுமார் 375,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனாலட் டிரம்ப், ஃபுளோரிடாவில் நெருக்கடி நிலையை அறிவித்து நிவாரணப் பணிகளுக்கு நிதியையும் ஒதுக்கியுள்ளார். 

Top