Images
  • scoot
    (படம்: Reuters)

வாடிக்கையாளர் நம்பகத்தன்மையைப் பெற முயன்றுவரும் ஸ்கூட்

ஸ்கூட் விமான நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற எண்ணியுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சேவைத்தடைகளைத் தொடர்ந்து ஸ்கூட் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்தச் சேவைத்தடைகள் பயணிகளை வெகுவாகப் பாதித்தன.

அதனை முன்னிட்டு வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை அதிகரிக்க ஸ்கூட் முயன்று வருகிறது.

தனது சேவைத்தரம் அண்மையில் குறைந்ததையும் அது ஒப்புக்கொண்டது.

திட்டமிட்ட சேவைநேரம் பின்பற்றப்படுவது தொடர்பான தரநிலையில் ஸ்கூட் பின்தங்கியது.

சென்ற ஆண்டிறுதி முதல் இந்த ஆண்டுத் தொடக்கம் வரை தனது சேவைநேரத் தரநிலை சரிந்துகாணப்பட்டதை ஸ்கூட் சுட்டியது.

2018 இறுதியிலிருந்து இவ்வாண்டுத் தொடக்கம் வரை துல்லியமான சேவைநேரத் தரநிலை சராசரி 70 விழுக்காடு என்ற நிலைக்கு இறங்கியிருந்தது.

அதற்குமுன்பும் 2018இல் அது 80 விழுக்காடு என்ற நிலையில்தான் இருந்தது.

2018 நவம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை ஸ்கூட் 6 விமானச் சேவைத்தடைகளைச் சந்தித்தது.

அதன்விளைவாக இரண்டு நாட்களுக்குமேல் பலமணிநேரத் தாமதங்கள் ஏற்பட்டன.

நிலைமையைச் சரிசெய்ய முயன்றுவரும் ஸ்கூட் அதில் முன்னேற்றம் கண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

Top