Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மார்க் எஸ்பர் அமெரிக்கத் தற்காலிகத் தற்காப்பு அமைச்சராக நியமனம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ராணுவ உயரதிகாரி மார்க் எஸ்பரைத் தற்காலிகத் தற்காப்பு அமைச்சராக நியமித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மார்க் எஸ்பர் அமெரிக்கத் தற்காலிகத் தற்காப்பு அமைச்சராக நியமனம்

(படம்: AFP)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ராணுவ உயரதிகாரி மார்க் எஸ்பரைத் தற்காலிகத் தற்காப்பு அமைச்சராக நியமித்துள்ளார்.

தற்காலிகத் தற்காப்பு அமைச்சர் பதவியை வகித்துவந்த பெட்ரிக் ஷனஹான் (Patrick Shanahan) பதவி விலகிவிட்டார்.

திரு ஷனஹான் மிகச்சிறந்த முறையில் பணியாற்றியதாகத் திரு டிரம்ப் Twitter பக்கத்தில் கூறினார்.

குடும்ப வன்முறை தொடர்பான தகவல்கள் எழுந்திருக்கும் நிலையில் அவர் பதவி விலக முடிவெடுத்துள்ளார்.

முன்னாள் மனைவிக்கும் மகனுக்கும் இடையிலும் அவரது முன்னாள் மனைவிக்கும் அவருக்கும் இடையிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

திரு ஷனஹான் தம் குடும்ப விவகாரம் குறித்து மிகவும் வருந்துவதாகவும் அது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்